வழக்கமாக உணவு செரிமான பாதை வழியாக செல்லும்போது பெருங்குடல் அதில் உள்ள அதிக நீரை உறிஞ்சுகிறது. சில நேரங்களில் இந்த செயல்பாடு நடக்காமல் இருக்கும்போது மலம் வழியாக அதிக நீர் வெளியேறுகிறது. இந்த செயல்பாடு அதிக பாதிப்பை உருவாக்கும் . இதனை வயிற்றுப்போக்கு என்று குறிப்பிடுவோம். வயிற்றுபோக்கு என்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உடல் வெளிப்படுத்தும் ஒரு அறிகுறியாக அறியப்படுகிறது. இந்த இயற்கை நிகழ்வு தானாக நடைபெறுவதை அப்படியே ஏற்றுக் கொள்வது நல்லது. மாறாக இதனைக் கட்டுப்படுத்த மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
திக நீர் வெளியேறுகிறது. இந்த செயல்பாடு அதிக பாதிப்பை உருவாக்கும் .