அத்யாவசிய பொருட்கள் வாங்க விரும்பும் பொதுமக்கள்

இதனையறிந்த, மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தமிழக முதல்வர் அறிவுரை படி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அத்யாவசிய பொருட்கள், காய்கறிகள் போன்றவை இருப்பிடத்திற்கு அருகில் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஆகவே, அத்யாவசிய பொருட்கள் வாங்க விரும்பும் பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ள வேண்டும். அத்யாவசிய பணிகளில் ஈடுபடக் கூடிய அலுவலர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வாகன பயணங்கள் மேற்கொள்ள ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றலாம். அத்யாவசிய பணிகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடரும். மேலும் வாகன அனுமதி தொடர்பாக எடுக்கப்பட முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.